திருவண்ணாமலையில் மாணவர்களுக்கு கல்வி கடன்
திருவண்ணாமலையில் நடந்த கல்விக்கடன் முகாமில் மாணவர்களுக்கு கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்;
Update: 2024-02-16 05:02 GMT
கல்விக்கடன்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் கல்விக் கடன் உதவியை வழங்கினார். உடன் பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.