முதியோர்களுக்கு கல்வி பயிற்சி
முதியோர்களுக்கு கல்வி பயிற்சி குறித்து திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்
Update: 2023-12-04 01:36 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம், பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமங்களில் பாரத எழுத்தறிவு கல்வி திட்டம் மூலம் முதியவர்களுக்கு கல்வி கற்பித்தல் நடத்தி வருகின்றனர்.இத்திட்டத்தினை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் இணை இயக்குனர் பொன் குமார், பார்வையிட்டு மையப் பொறுப்பாளர்கள், கற்போருடன் கலந்துரையாடல் செய்தார்.கற்போர் கையெழுத்து இடவும், வங்கி மற்றும் தபால் அலுவலகம் செல்லும்பொழுதும், பஸ் பயணம் செய்ய ஏதுவாக படித்துவிட்டு பயணிக்கவும் எழுதவும் எண்களை கற்றுக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஆய்வின் போது ஆலோசனை வழங்கினார்.அப்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன், வட்டார கல்வி அலுவலர் இரா. அருணகிரி, ஆசிரியர் பயிற்றுநர் ச.கோவர்த்தனன், இராமச்ச ந்திரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அன்பரசி, செண்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.