தேர்தல் பறக்கும் படையினர் அம்பத்தூரில் அதிரடி
அம்பத்தூரில் தேர்தல் பரக்கும் படையினர் 24 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-19 17:36 GMT
பறக்கும் படை
அம்பத்தூரில் 24 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கேனல் சாலையில் சொகுசு காரில் 24 லட்ச ரூபாயை கொண்டு வந்த பொழுது தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து பணம் கொண்டு வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். எங்கிருந்து பணம் கொண்டு வருகிறீர்கள் யாருடைய பணம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்கிற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.