திருவண்ணாமலை : வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 5ந்தேதி அன்று வெளியிடப்படப்படும்;

Update: 2023-12-03 05:25 GMT

வாக்காளர் சுருக்க முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2024இல், தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து படிவங்கள் வரும் கடந்த 9ந்தேதி வரை பெறப்பட்டு,இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 5ந்தேதி அன்று வெளியிடப்படப்படும். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்2024ஐ முன்னிட்டு கடந்த நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சிறப்பு முகாம்களின்தேதிகள் மாற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்டதில் மட்டும் பிரத் யேகமாக டிசம்பர் 2ந்தேதி (சனிக் கிழமை) மற்றும் 3ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.எனவே, 2ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 3ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News