சிவகாசியில் அபாய நிலையில் மின்சார பெட்டி
சிவகாசியில் அபாய நிலையில் உள்ள மின்சார பெட்டியை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-05-05 09:12 GMT
சிவகாசி அருகே திருத்தங்கல் மண்டல பகுதிகளில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டிகள் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன.சுமார் 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளதில் 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், தீப்பெட்டி ஆலைகளும்,ஏராளமான தொழில் நிறுவனங்களும் உள்ளன.இந்த மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பத்தில் மின்சார வயர்கள் இணைக்கப்பட்டுள்ள பெட்டி திறந்த நிலையில், தரையில் இருந்து 3 அடி உயரத்தில் மின்சார பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.இரவு தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கான சுவிட்ச் பெட்டியாக உள்ளது.இதில் பெரும்பாலான கதவுகள் உடைந்து திறந்து கிடக்கிறது. திறந்து கிடக்கும் மின்பெட்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. பள்ளிகள்,கல்லூரி செயல்படும் காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மின்சார பெட்டி வழியாக நடந்து செல்லும் போது விளையாட்டாக மின்சார பெட்டியில் கை வைத்து விட வாய்ப்பு உள்ளது.எனவே திறந்த நிலையில் உள்ள அனைத்து மின்சார பெட்டிகளையும் சீரமைக்க வேண்டும்.மின்வாரிய துறையினர் மேற்கொள்ள வேண்டும்.என திருத்தங்கல் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.