அவ்வையார் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்

Update: 2023-11-08 09:55 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார். அவ்வையார் விருது 8 கிராம் (22கேரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ1,00,000 ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலை, மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.11.2023 ஆகும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்,18 வயதிற்கு மேற்பட்டவரகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு , கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்ததை நேரிலோ அல்லது 04328-296209 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News