கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு
அரசு கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவர்கள் உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-02-07 08:31 GMT
கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் ஆகிய மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். https://ssp.tn.gov.in στότη இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வரும் பிப்.29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளார்.