திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு......
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரித்தார்.
தர்மபுரி திமுக மேற்கு மாவட்டத்தின் சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி ஆதரித்து பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான கிருஷ்ணாபுரம்,பழைய தர்மபுரி.சவுளூர், குண்டல்பட்டி,முத்துப்பட்டி, கொட்டாவூர்,செங்கல் மேடு போன்ற பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் தலைமையில் பொது மக்களிடையே உதயசூரியின் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் ,கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம்,முதியோர் உதவித்தொகை,மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்,போன்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது.எனவே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ மணியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பொது மக்களிடையே மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் பேசினார்.