மதத்தில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தினால் ஒழிக்கனும்: மகாராஜன்

மதத்தில் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தினால் ஒழிக்கனும் என மகாராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 11:19 GMT

மகாராஜன்

தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் உலகளவில் பேசப்படுகிறது. – பிற்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை. நேதாஜி சுபாஷ் சேனைத்தலைவர் என மகாராஜன் பேட்டியளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவரை கடந்த ஜூலை 1 தேதி தாக்கியுள்ளார். அது குறித்து மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்.., திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவரை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களால் 1 தேதி தாக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். நாங்குநேரியில் பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட போது அரசும், அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், திரைப்பட இயக்குனர்கள் போட்டி போட்டு உதவி செய்தனர். காவல்துறை சார்பில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 ஆனால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான மாணவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அரசும், அதிகாரிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. சமூக நீதி பேசும் அரசு இன்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

வழங்கி அரசும், அதிகாரிகளும் உரிய உதவிகள் வழங்க வேண்டும்.தாக்கிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 2 ஆண்டுகளாக அப்பகுதி மாணவர்கள் சமூக ரீதியாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், காவல்துறையினரும் இணைந்து மாணவர்களிடையே எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே கோரிக்கை.

தொடர்ந்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போன்ற பதிவுகளால் இளைஞர்கள் மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்விக்கு.? இன்றைக்கு 50 சதவீதம் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்கு காரணம் சமூக வலைதளம் தான் காரணம். மேலும், குற்றப் பின்னணி உள்ளவர்கள், கொலை கொள்ளையடிப்பவர்கள் குறிப்பிட்ட சாதி ரீதியான பாடல்கள் வைத்து ரிலீஸ் வெளியிடுவது,

பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வெளியிடுவது இன்றைக்கு அதிகரித்து பள்ளி மாணவர்களிடையே இது போன்ற ஜாதிய பிரிவுகள் ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை தகுந்த எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News