தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மல்லசமுத்திரத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது.;
Update: 2023-10-20 00:50 GMT
மனு கொடுக்கும் போராட்டம்
கடந்த 11மாதங்களாக மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ் பணிபுரிந்துவரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் தொடர்ச்சியாக பணிவழங்காமல் ஒருவாரம்விட்டு ஒருவாரம் என வேலைவழங்கி வருகின்றனர். எனவே, இப்பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக பணிவழங்க கோரியும், உடனடியாக ஊதியம் வழங்ககோரியும் தமிழ்மாநில விவசாயதொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், வருதராஜி, சந்திரன் தலைமையில் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வட்டாரவளர்ச்சி அலுவலகங்களில் மனுகொடுத்து போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், அன்புமணி மற்றும் மாவட்ட தலைவர் ஜெயராமன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.