மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-03 07:37 GMT
பலியான விவசாயி
தென்காசி அருகில் உள்ள அதிசயபுரத்தை சேர்ந்த மாடசாமி (61) நேற்று மாலையில் விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அதே பகுதியை சேர்ந்த அஜய் (12) என்பவருடன் வயலுக்கு சென்றுள்ளார். வயலின் அருகே மைக்கேல் என்பவரின் தென்னந்தோப்பு வேலியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்த சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார் .
அப்போது வேலியை தொட்ட மாடசாமியும் அஜய்-யும் தூக்கி எரிந்தது .இதில் மாடசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அஜய் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.