விளைந்தும் விலை இல்லாத செண்டு மல்லியால் வேதனை

திண்டுக்கல் அருகே விளைந்தும் விலை இல்லாத செண்டு மல்லியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2024-03-09 06:14 GMT

செண்டு மல்லி

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தனி ஆர்வம் காட்டுவது உண்டு.குறிப்பாக திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள யாகப்பன்பட்டி, வெள்ளோடு, ராமநாதபுரம், சாணார்பட்டி, ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செண்டுமல்லி, முல்லை, கனகாம்பரம், வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்கின்றனர். தற்போது கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் விவசாயிகள் செண்டு மல்லி பூக்கள் சாகுபடி செய்து உள்ளனர்.எதிர்பார்த்த விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செண்டு மல்லி வழக்கத்தைவிட மிக அதிக அளவில் விளைச்சல் ஆகியுள்ளதால் விவசாயிகள் வேதனை.
Tags:    

Similar News