திருத்தணியில் பெண் தற்கொலை

திருத்தணி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்

Update: 2024-03-19 17:52 GMT
கொலை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட பத்மாவதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு(46). இவரது மனைவி ஜோதி (35). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த ஜோதி படுக்கை அறைக்குள் சென்று உட்புறமாக கதவை பூட்டிக் கொண்டாா். இதையடுத்து பிரபு மற்றும் அவரது குழந்தைகள் பலமுறை அறையின் கதவை தட்டியும் திறக்காததால், அக்கம், பக்கத்தினா் வந்து கதவை கடப்பாறையால் உடைந்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, ஜோதி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News