தஞ்சாவூரில் திருவிழா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகா சிவராத்திரி விழா மற்றும் கும்பகோணம் மாசி மகம் திருவிழாக்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-20 08:25 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்

கும்பகோணம் மாசிமகம் திருவிழா வருகின்ற 24.02.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டும், அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் மகா சிவராத்திரி விழா வருகின்ற 08.03.2024 அன்று நடைபெறுவதையொட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மாநகராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை, போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை போன்ற பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விழா சிறப்புடன் நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் இரா.லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள் பூர்ணிமா (கும்பகோணம்) இலக்கியா (தஞ்சாவூர்) மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News