வெள்ள பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் தீவிரம் - அமைச்சர் சாமிநாதன்

தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நிவாரண உதவித்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2023-12-31 07:58 GMT

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

நெல்லைக்கு நேற்று வருகை தந்த செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நிவாரண உதவித்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கூறினார். இந்த பேட்டியின் பொழுது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்,நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான்,கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News