தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
தர்மபுரி பெரியார் மன்றத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் நல திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழா தர்மபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் நேற்று இரவு தர்மபுரி பெரியார் மன்றத்தில் சுபாஷ் ஏற்பாட்டின் பேரில் நலத்திட்ட உதவிகளை 20 நபர்களுக்கு தையல் மெஷின் பத்து நபர்களுக்கு சலவை பொட்டி 200 பேருக்கு புடவைகள் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாவட்ட , முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். விழாவையொட்டி ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, மதிவாணன், கோபால் மோகன், தகடூர்விஜயன்,அண்ணா கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், மலர்விழி, சுரேஷ் நகர இணை செயலாளர் சுரேஷ், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் வேல்முருகன், பலராமன், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, ராஜா, சக்திவேல், மாதையன், முன்னா, மாதேஷ், நாகராஜன்,, செந்தில்வேல், சத்யா , கார்த்திக் மாதேஷ், பூக்கடை வெற்றி, சரவணன், கலாகாவேரி. வார்டு செயலாளர் ஜெகன், வார்டு பொறுப்பாளர்கள் சுந்தரபாண்டி. அண்ணாதுரை, அர்ஜுனன், வடிவேல், முனிராஜ், ரஞ்சித், ஜீவா, அழகேசன், 29 ஆவது வார்டு செயலாளர் ஜெயராமன், கார்த்திகேயன், கோபி, நவீன், ப்ரவீன், பிரதாப், மோகன், தகடூர் விஜயன், அறிவாளி மாதையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.