இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;
Update: 2024-03-08 06:54 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் நடந்தது. எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இந்த முகாமில் டாக்டர் ஜனனி தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். கண்ணில் புரை, மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டன. முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கண் புரை நீக்குதல் அறுவை சிகிச்சைக்கு 41 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.