இலவச மருத்துவ முகாம்
Update: 2023-12-11 06:03 GMT
இலவச மருத்துவ முகாம்
அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் 30வது வார்டு திமுக சார்பில் நாகல்புதூர் காளியம்மன் கோவில் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் துவக்க விழாவிற்கு, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழநி எம்எல்ஏ செந்தில்குமார் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.