தேர்தல் நடத்தை விதிகளால் களை இழந்த ஆட்டுச் சந்தை

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், நத்தத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஆட்டுச்சந்தை களை இழந்து உள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2024-04-08 10:51 GMT

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும்நிலையில், நத்தத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஆட்டுச்சந்தை களை இழந்து உள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆடு சந்தை நடைபெறும்.திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக நத்தம் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் நத்தம் சந்தைக்கு வருகின்றனர்.

மேலும் கடந்த வருடம் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வரை ஆடு விற்பனை நடைபெற்றது.இந்த நிலையில் இவ்வாண்டு ரம்ஜான் பண்டிகை தின சில தினங்களில் உள்ள நிலையில் நேற்று அதிகாலை சந்தை கூடியது. வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.

ஒரு ஆடு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 49 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தால் 2 முதல் 3 ஆடுகள் மட்டுமே வாங்க முடியும் என்பதால் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை.

Tags:    

Similar News