அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டதால் சங்ககிரி அருகே பரபரப்பு
சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலம் மீட்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டது,;
Update: 2023-10-18 14:15 GMT
அரசு புறம்போக்கு நிலம் மீட்பு
சங்ககிரி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் 1ஏக்கர் 3 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசிராமணி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தேவூர் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். பின்னர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு போக்குவரத்துப் பாதை அமைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.