குளோபல் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா.;
Update: 2024-04-08 07:04 GMT
பட்டமளிப்பு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில், யு.கே.ஜி., முடித்து 1ம் வகுப்பிற்கு செல்லும் 90 மழலையர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் நடந்த தேர்வுகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் பாபு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.