உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு எசனை ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்கரையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் கலந்துகொண்டார்

Update: 2023-11-02 11:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எசனை ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்கரையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியது: . தமிழ்நாடு அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்த ஒரு பெண் குழந்தையும் பொருளாதார காரணமாக உயர்கல்வியை தொடராமல் இருக்கக் கூடாது என்பதன் காரணமாக சமூக நலத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகின்றது.

அவர்கள் உயர் கல்வியினை முடியும் வரை வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். கல்வி ஒன்றுதான் அவர்களுக்கான ஆதாரம். உங்களின் குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பட்டப் படிப்பையாவது முடித்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவும் குழந்தைகளின் கல்வி தடை பட்டுவிடக்கூடாது என்பதற்காக காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.. பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின், பணிகள் மிகவும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து. கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கும், சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். இந்நிகழ்வுகளில் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் அருளாளன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கீதா, பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், எசனை ஊராட்சிமன்ற தலைவர் சத்யா மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News