திருமஞ்சனத்தில் மளிகைக் கடைக்கு அபராதம்

Update: 2023-10-31 10:28 GMT

பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலை கோவிலை சுற்றி உள்ள நகரின் முக்கிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் சந்திப்பின்போது, லார்ஜ், உணவகம், மளிகை கடை, தேநீர் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள என் எஸ் கே மளிகை கடையில் ஆய்வு செய்தபோது தப்பாக்கோ 10 கிலோ எடை உடைய போதைப்பொருள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த ஆய்வானது கடந்த நான்காம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 214 கடைகள், லாட்ஜ், தேனீர் கடைகள் மளிகை கடைகள் உணவகம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டோம் இதில் 35 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது இன்று ஆய்வு மேற்கொள்ளும் போது ஒரு மளிகை கடையில் 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News