குமரியில் பாரம்பரிய முறைப்படி காவடி எடுத்த காவலர்கள்

குமரியில் பாரம்பரிய முறைப்படி எடுத்த போலீஸ் பொதுப்பணி துறை காவடி எடுத்துனர்.

Update: 2023-12-15 16:12 GMT
அரசு ஊழியர்கள் காவடி .
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரசுவாமி திருக்கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இயங்கி வந்த போது, அப்போதைய மகாராஜா உத்தரவின் பேரில்  நாட்டில் குற்றங்கள் குறைய போலீசாரும், நாடு விவசாயத்தில் வளர பொதுப்பணித்துறையினரும் காவடி எடுத்தனர்.    

 அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குமார கோவிலுக்கு போலீசார்ரும், பொதுப்பணித்துறையினரும் காவடிகள் எடுத்து ஊர்வலம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக நடந்து வருகிறது.    

  சிறப்புமிக்க இந்த காவடி பவனி இந்த வருடம் வெள்ளிக்கிழமையான நேற்று நடைபெற்றது. தக்கலை போலீஸ் நிலையத்துக்கு  உட்பட்ட பகுதிகளில் இருந்து குமார கோவிலுக்கு புஷ்பகாவடி,, வேல் காவடி, பறக்கும் காவடி, பால் காவடி ஊர்வலம் நடைபெற்றது.    

  தக்கலை போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற காவடி ஊர்வலத்தில் தக்கலை சப் கலெக்டர் கௌஷிக், டிஎஸ்பி உதயசூரியன், பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி பிரவீன் ஜீவா, முன்னாள் மத்திய  அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.       இதேபோல் தக்கலை பொதுப்பணித்துறை சார்பில் நடந்த காவடி ஊர்வலத்தில் உதவி பொறியாளர் கதிரவன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News