கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த மாணவன்

பழனியில் மலைக்கோவில் படிக்கட்டுகளில் உடலை வில்லாக வளைத்து நடந்து சிறுவன் சாதனை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

Update: 2024-02-21 05:45 GMT

கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த மாணவன்

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சிவசங்கரி தம்பதியின் மகன் ரிஸ்வந்த் குமார்(14). இவர் நெய்க்காரப்பட்டியில் உள்ள பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் யோகா கலையில் பயிற்சி எடுத்து வருகிறார். யோகா கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டு சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சிறுவன் ரிஸ்வந்த் குமார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக பழனி இடும்பன் மலையில் உள்ள 100 படிக்கட்டுகளை, சக்கராசனம் என்று சொல்லக்கூடிய யோகாசனத்தை மேற்கொண்டு மலை ஏறினார்.சிறுவன் ரிஷ்வந்த் குமாரின் முயற்சியை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்டு அமைப்பு உலக சாதனையாக பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News