அனுமன் ஜெயந்தி விழா

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

Update: 2024-01-12 11:47 GMT

அவிநாசியில் மிகவும் பழமையான வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா.  சிறுவர், சிறுமிகள், சிலம்ப விளையாட்டு வீரர்கள், கலந்து கொண்ட கிராமிய வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.        

திருப்பூர் மாவட்டம்,அவிநாசியில் சுமார் 1200- வருடம் பழமையான ஸ்ரீ வியாஸ ராஜர் எனும் அரசரால் நிறுவப்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது.  இங்கு வருடா வருடம் பக்தர்கள் மூலம் நடத்தபடுகின்ற அனுமன் ஜெயந்தி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.   மூலமந்ர ஹோமம், ஆராதனை நிகழ்ச்சியுடன் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சி துவங்கியது.  அதைத்ததாடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  மாலை வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  தொடர்ந்து சுந்தரகாண்ட அனுமன் சிறப்பு சொற்பொழிவும் அன்னதானமும் நடைபெற்றது.  மாலை பக்தி பஜனைகள் நடைபெற்றது.  விழாவின் நிறைவாக, அழிந்து வரும் கிராமிய வீர விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள், சிலம்ப விளையாட்டு வீரர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம், வாழ் வீச்சு, நெருப்பு பந்து சுற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து உற்சவர் ராமர் சீதை லட்சுமணன் சுமந்த அனுமான்  திருவீதி உலா நடைபெற்றது. பெண்கள் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

Tags:    

Similar News