வண்ணார்பேட்டை பரணிநகர் சாலையால் மக்கள் அச்சம்
நெல்லை பகுதியில் கனமழை பெய்ததால் வண்ணார்பேட்டை பரணி நகர் சாலை சேதமடைந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 06:25 GMT
சேதமடைந்த சாலை
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது.இந்த நிலையில் வண்ணார்பேட்டை பரணிநகர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் கடந்த இரண்டு நாள் பெய்த மழையினால் சகதிகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.