தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு திமுக சார்பில் உதவி
கருங்குழி பேரூராட்சியில் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.;
Update: 2023-10-27 06:38 GMT
திமுகவினர் நிவாரண உதவி
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காளி என்பவரின் கூரை வீடானது விபத்து ஏற்பட்டது உடனடியாக மதுராந்தகம் தீயணைப்பு துறையும் காவல்துறையும் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் கருங்குழி பேரூர் திமுக சார்பில் பேரூராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி பச்சையப்பன் ஏற்பாட்டில் அந்த குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மல்லிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதனை பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதாசங்கர் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும் அரசு சார்பில் வீடு கட்டித்தர ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதி அளித்தனர்.