புதுக்கோட்டையில் 1750 மரக்கன்றுகள் உள்ளடக்கிய "குறுங்காடு"

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி கண்டங்காரப்பட்டி கிராமத்தில் 1750 மரக்கன்றுகள் உள்ளடக்கிய "குறுங்காடு" துவக்க விழா நடைபெற்றது.;

Update: 2025-12-24 14:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி கண்டங்காரப்பட்டி கிராமத்தில் 1750 மரக்கன்றுகள் உள்ளடக்கிய "குறுங்காடு" துவக்க விழா நடைபெற்றது. இங்கு பழவகை மரக்கன்றுகளும், பாரம்பரிய மர வகைகளும் நடவு செய்யப்பட்டது. நிகழ்வை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள். உணவக உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சண்முகபழனியப்பன் முன்னிலை வகித்தார்கள். கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து நடைபெற்ற களப்பணியில் கிராம பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கண்டங்காரப்பட்டி பசுமை நிலம் அறக்கட்டளையும், மரம் அறக்கட்டளையும், சண்முகபழனியப்பன் இராமுஅம்மாள் அறக்கட்டளையும், இணைந்து செய்திருந்தனர். வருகை தந்த அனைவரையும் பழ. குமரேசன் வரவேற்றார். மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தையும் மனிதர்கள் உயிரினங்கள் வாழ்வதற்கு மரங்கள் இன்றியமையாதது என்பதை பற்றியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுங்காடுகள் அதிகமாக உருவாக்குவதற்கு தன்னார்வலர்கள் முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் மரம் ராஜா விளக்க உரையாற்றினார்கள். கண்டங்காரபட்டி குணசேகரன் நன்றி கூறினார்.

Similar News