நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

சென்னை செங்குன்றம் புறவழிச்சாலையில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-03 07:08 GMT

சென்னை செங்குன்றம் புறவழிச்சாலையில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைத்துறை ஆசியுடன், தனியார் ஆக்கிரமிப்பில் குறுகிய சாலை சந்திப்பில், பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் புறவழிச்சாலை, வடகரை- மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பில், தனியார் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து, வடசென்னை துறைமுகத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும், மேற்கண்ட சந்திப்பை கடந்து சென்று வருகின்றன. மேலும், அங்கிருந்து, 1 கி.மீ., துாரத்தில், வடகரை ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்க பள்ளி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன. அவற்றில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த, 2,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களும் மேற்கண்ட சாலை சந்திப்பு வழியாகத் தான் பள்ளிகளுக்குச் சென்று வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சந்திப்பின் இரு பக்கமும், 15 அடி நீளத்திற்கு, தனியார் ஆக்கிரமிப்பு கட்டடம் மற்றும் இரும்பு தடுப்பால் அமைக்கப்பட்ட கடைகள் உள்ளன. அதனால், அந்த சந்திப்பை கடப்போர், கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
Tags:    

Similar News