குன்றத்துாரில் நெடுஞ்சாலை சீரமைப்பு

மக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை சீரமைத்து வருகின்றனர்

Update: 2023-12-29 08:33 GMT

குன்றத்துாரில் நெடுஞ்சாலை சீரமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், சோமங்கலம், அமரம்பேடு, நந்தம்பாக்கம், நல்லுார், போரூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லுாரி, தனியார் தொழிற்சாலை பேருந்துகள் அதிகம் செல்கின்றன. இந்நிலையில், இந்த சாலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் செல்லும் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை சரிந்து விழும் நிலை உள்ளதால், அந்த வழியே வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். விரைவில், இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்தான செய்தி ஊடங்களில் படத்துடன் வெளியானதையடுத்து, இந்த பகுதியை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர்.
Tags:    

Similar News