குமரி டோல்கேட்டில் கட்டண உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
திருப்பதி சாரத்தில் குமரி டோல்கேட்டில் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி;
Update: 2024-03-26 17:03 GMT
குமரி டோல்கேட்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. வருகிற 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி கார், ஜீப், வேன் அல்லது இலகு ரகு வாகனத்துக்கு, இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ் ஆகியவற்றுக்கு பஸ் அல்லது டிரக் (இரு அச்சுகள்) , பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனம் ( 4முதல் 6 அச்சுகள்), அதிக அளவு கொண்ட வாகனம் ( 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்டவை), வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கும் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்குநேரியில் டோல்கேட் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தூரம் இல்லாத நிலையில் திருப்பதிசாரத்திலும் டோல்கேட் அமைந்துள்ளது. எனவே திருப்பதிசாரம் டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை உள்ள நிலையில், தற்போது திருப்பதிசாரம் டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.