புளியங்குடியில் இந்து முன்னணி பயிற்சி முகாம் தொடக்கம்

இந்து முன்னணி பயிற்சி முகாமில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-10 12:32 GMT

புளியங்குடியில் இந்து முன்னணி பயிற்சி முகாம் தொடக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி கோட்ட அளவிலான இந்து முன்னணி நிா்வாகிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் புளியங்குடியில் தொடங்கியது. மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியம் விளக்கேற்றி, முகாமைத் தொடக்கிவைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் அரசுராஜா, மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேல் உள்ளிட்டோா் பேசினா். தென்காசி மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளா் ஆனந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த இந்து முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கோட்டத் தலைவா் தங்கமனோகா் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News