குழந்தைகளின் உரிமை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
வந்தவாசி, குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமை வகித்தார். முதன்மை மேலாளர் எஸ்.செல்லா, பள்ளி உதவி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காந்தி மதி, உதவி ஆய்வாளர் சாந்தி ஆகியோர் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து பள்ளியின் முன் ஒருவருக்கொருவர் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் ஜான்சுகுமார், சிரில், குணா, ராபின் மற்றும் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.