மனைவி கண்டித்ததால் மன உளைச்சலில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடியில் கணவர் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மன உளைச்சல் அடைந்த கணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-28 09:09 GMT

தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடி பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான மகேஸ்வரன். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரன் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News