நான் முதல்வன் திட்டம் : மாணவிகளை உற்சாகப்படுத்தி அமைச்சர் பேச்சு

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்காக நடைப்பெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் வறுமையில் படிப்பவர்கள் அல்ல நாட்டின் பெருமைக்காக படிப்பவர்கள் என மாணவிகளை உற்சாகப்படுத்தி பேசினார்.

Update: 2024-02-01 07:46 GMT

  சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சேலம், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 7800 அரசு பள்ளியில் பயிலும் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கான தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி விவேகானந்தா மகளிர் கல்லூரி தாளாளர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் அவரது பிறந்தநாளில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்காக கொண்டு வந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் எனவும் இந்தியாவில் முனைவர் பட்டம் படிக்கும் 18000 பேரில் 13 ஆயிரம் பேர் பெண்கள் என்றும் பெண்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று நினைப்பவரே தமிழக முதலமைச்சர் எனவும் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிகளுக்குச் செல்லும் போது அச்சத்தில் செல்கின்றனர்.

மாணவிகளின் அச்சத்தை போக்குவதற்காகவே இதுபோன்ற கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தில் தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும். இந்தியாவிலேயே வெளிநாட்டில் படிப்பவர்கள் மூன்றில் இரண்டு பேர் தமிழர்களாக உள்ளார்கள் என்றும் 1952 ஆண்டு தமிழகத்தில் 0. 92 சதவீத பெண்கள் மட்டுமே அப்போது படித்திருந்ததாகவும் பெண்கள் கல்விக்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் எனவும் அதன் பின்னர் படிப்படியாக திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் தற்போது பெண்கள் 56 சதவீதம் படித்தவர்களாக உள்ளதாகவும் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் வறுமைக்காக படிப்பவர்கள் அல்ல நாட்டின் பெருமைக்காக படிப்பவர்கள் என மாணவிகளிடையே உற்சாகப்படுத்தி பேசினார். அப்போதுசேலம், ஈரோடு மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ,அரசு பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News