அனுமதி இன்றி குதிரை வண்டி பந்தயம் நடத்தியவர் கைது - வண்டி பறிமுதல்

வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்க்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக குதிரை வண்டி பந்தயம் நடத்திய நபர் கைது

Update: 2023-10-25 03:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரை உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் தேதி இளைஞர்கள் சிலர் குதிரை வண்டி பந்தயம் நடத்தினர்..இந்த குதிரை வண்டி பந்தயத்தினால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகிய நிலையில் மேலும் தேசிய நெடுஞ்சாலையில் குதிரை வண்டி பந்தயம் நடத்த காவல்துறையினர் உரிய அனுமதி வழங்காத நிலையில் சட்ட விரோதமாக குதிரை வண்டி பந்தயம் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர் இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்காளர் ஆல்பர்ட் ஜான் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குதிரை வண்டி பந்தயம் நடத்திய நபர்களை கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரேம் குமார் (23) என்பவர் சட்டவிரோதமாக தேசிய நெடுஞ்சாலையில் குதிரை வண்டி பந்தயம் நடத்தியது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் அவர் மீது வழக்குபதிவு செய்து அவரிடம் இருந்த குதிரை வண்டியை பறிமுதல் செய்தனர்.. மேலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்க்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் குதிரை வண்டி பந்தயம் நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்..

Tags:    

Similar News