சட்டவிரோத மது விற்பனை - 16 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-02-12 02:53 GMT
 கைது
தென்காசி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உட்பிரிவின் பெயரில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் தடுக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார். இது தொடர்ச்சியாகவே இரவு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையின் போது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த  16 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News