சர்க்கரை ஆலை அரவை துவக்க விழா

Update: 2023-12-15 06:38 GMT
சர்க்கரை ஆலை அரவை துவக்க விழா
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பட்டாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆலை அறவையை துவக்கி வைத்தார். மதுராந்தகம் சர்க்கரை ஆலை பழமையான ஆலை ஆகும் தமிழகத்தில் கரும்பு சாகுபடி மற்றும் அறவையில் முதலிடமாக திகழ்ந்த ஆலையாக திகழ்ந்தது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஆலை அளவைக்காக இயக்கப்பட்டு சுமார் 2 லட்சத்து 3 ஆயிரம் டன் அறவை செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதேபோல் டிசம்பர் மாதம் ஆலை அறவையை தொடங்கியுள்ளது. தற்பொழுது 2500 விவசாயிகள் 6700 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலை இன்று அதே டிசம்பர் மாதம் அறவை துவக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போல நான்கு மாதம் ஆலை அறவையை இயங்கும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக அறவை செய்ய ஆலை நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது இருந்தாலும் சுமார் 2 லட்சம் டன் அறவை குறையாமல் அறவை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வரை இந்த ஆலை இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், திமுக ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல் ஆட்சியர் ஜவகர்பிரசாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News