சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

சத்தியமங்கலத்தில் கோடை வெயில் இருந்து மக்களை காக்கும் வகையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்;

Update: 2024-04-28 10:53 GMT

சத்தியமங்கலத்தில் கோடை வெயில் இருந்து மக்களை காக்கும் வகையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் இந்த கடும் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுத்திருந்தார்.

Advertisement

அவரது ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலைய வணிக வளாகம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் பந்தலை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி,

சக்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவராஜ், கொமராபாளையம் பஞ்சாயத்து தலைவர் சரவணன், முன்னாள் ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News