எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வள்ளுவர் சிலை திறப்பு

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-11-15 08:01 GMT

திருவள்ளுவர் சிலை திறப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக 1995 ஆண்டு முதல் பணியாற்றிய இந்திரஜித், இந்த ஆண்டு பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு தான் பணியாற்றிய பள்ளிக்கு அன்பளிப்பு வழங்கும் வகையிலும், இதே பள்ளியில் பணியாற்றிய தமிழ் பட்டதாரி ஆசிரியையாகிய தன்னுடைய மனைவி அனுராதாவின் நினைவாகவும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் செலவில் திருவள்ளுவர் சிலைக்கான குடில் மற்றும் சுற்றுச்சுவர் தரைத்தளம் கிரானைட் டைல்ஸ் அமைத்து இப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் எடப்பாடி நகர மன்ற தலைவர் பாட்ஷா, மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் இந்திரஜித், ஆகியோர் மலர்தூவி திருவள்ளுவர் மணிமண்டபத்தினை திறந்து வைத்தனர். மேலும் திருக்குறள் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர மன்ற தலைவர், பள்ளி முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.இதில் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News