பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
பாபநாசம் அணையில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
Update: 2024-04-30 05:00 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது.இந்த அணையில் இருந்து விவசாயத்திற்காக நேற்று 238.50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்.30) காலை நிலவரப்படி 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றை விட இன்று வெளியேற்றம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.