பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும் கடந்த சில மாதங்களாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து 54 அடிக்கு சென்று விட்டது.
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது அதே வேளையில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படாத அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 58.17 அடியாக இருந்தது அப்போது அணைக்கு வினாடிக்கு 317 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் தண்ணீர் குடிநீர் தேவைக்கு ஆற்றில் வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1842 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 58.32 அடியாக இருந்தது.