பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மலை பகுதியில் பரவலாக பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2024-05-22 08:10 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடியாாகும் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு திருப்பூர் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2, லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

நீலகிரி மலைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது அதை வேளையில் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் 45 அடிக்கு கீழே சென்றது இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது.

Advertisement

இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது நேற்று முன்தினம் எட்டு மணிக்கு வினாடிக்கு 1,042 கன அடி தண்ணீர் வந்தது அப்போது அணை நீர்மட்டம் 45.02 படியாக இருந்தது அணையில் இருந்து குடிநீருக்காக பின்னாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது நேற்று மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1347 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 45 41 ஆக இருந்தது. அணையிலிருந்து பவானிசாகர் ஆற்று குடியிருக்க வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு  தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News