தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்து காணப்படும் பனிப்பொழிவு

தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி தொப்பூர் பாளையம் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகாரித்து காணப்படுவதால் பொது மக்களின் அத்தியாவசியப் பணிகள் பாதிப்படைந்துள்ளது.

Update: 2024-03-08 09:25 GMT
தமிழகம் முழுவதும் தற்போது கோடைக்காலம் ஆரம்பித்து நாளுக்கு நாள் வேலையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நல்லம்பள்ளி தொப்பூர் பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனி அதிக அளவில் நிலவி வருகிறது. இயல்பாகவே கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பாகவே மாசி மாதத்தின் தொடக்கத்திலேயே பனிப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து காணப்பட்டு முழுவதுமாக மறைந்து விடும். ஆனால் தற்போது மாசி மாதத்தின் இறுதியில் இருந்தும் பனிப்பொழிவு தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. இந்த சீதோசன நிலை மாற்றம் காரணமாக பல்வேறு விவசாய பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை நேரங்களில் காணப்படும் மூடுபனியின் காரணமாக பொதுமக்களின் பல்வேறு அத்தியாவசியப் பணிகள் பாதிப்படைந்து ள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News