தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-15 12:44 GMT

மாவட்ட ஆட்சியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை வருவாய் மாவட்ட தனித்தேர்வு மையங்களில் மார்ச்-2019, ஜூன்-2019, மார்ச்-2020, செப்டம்பர் -2020, ஆகஸ்ட் -2021 மற்றும் செப்டம்பர் – 2021 ஆகிய ஆறு (06) பருவங்களில் மேல்நிலை / பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் அத்தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், தேர்வு மையங்களில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் மேல்நிலை / பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சிவகங்கை, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீளப் பெறப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் சிவகங்கை, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினால் அழிக்கப்படும். மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்கள் சென்னை -6, அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மார்ச்-2019, ஜூன்-2019, மார்ச்-2020, செப்டம்பர் -2020, ஆகஸ்ட் -2021 மற்றும் செப்டம்பர் – 2021 ஆகிய ஆறு (06) பருவங்களில் மேல்நிலை / பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்படாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்பதனால் இத்தருணத்தைப் பயன்படுத்தி 31.01.2024 – தேதிக்குள் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை பணி நாட்களில் நேரில் தொடர்பு கொண்டோ அல்லது ரூ.50/- மதிப்புள்ள அஞ்சல்வில்லைகள் ஒட்டிய சுய முகவரியிட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம் மற்றும் தேர்வு கூட அனுமதி சீட்டின் அச்சுப்பகர்ப்பு நகலினை இணைத்து அனுப்பி உரிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News