ராமநாதபுரத்தில் தொழில் முதலீட்டாளர் மாநாடு

ராமநாதபுரத்தில் நடந்த தொழில் முதலீட்டார் மாநாட்டில் ரூ313 கோடி ரூபாய் முலீட்டில் தொழில் முனைவோருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Update: 2023-11-20 12:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் முனைவோருக்கான ரூபாய் 313 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இவ்விழா ஒரு தனியார் மகாலில் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜ கண்ணப்பன் தொழில் முனைவோருக்கான மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் அமைச்சர் பேசும்போது மாண்புமிகு முதலமைச்சர் கடந்த மாதம் சென்னையில் மாபெரும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்.இதில் மூன்று லட்சம் கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு 4,லட்சத்து 18000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில் முதல்வர் இந்த மாநாட்டை நடத்தினார்.

இத்திட்டம் செயல்படுத்தினால் தான் தமிழகத்தில் தொழில் வளம் பெறும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட வருகிறது. இதில் சிறு குறு தொழில்களும் வளம் பெறும் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வந்து செயல்படுத்துவார்கள் என்றார். திட்டத்தின் மூலம் மாவட்டம் தோறும் முதலீட்டாளர்களை ஒருங்கினைத்து தொழில் நிறுவனங்களை உருவாக்கி அனைவரிடத்தும் வேலை வாய்ப்பு பெருக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது அதை தாண்டி இன்று 313 கோடி ரூபாய் கூடுதலாக முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர் இதன் மூலம் 1532 நபர்கள் வேலை வாய்ப்பு பெரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பல்வேறு தொழில்கள் வளம் பெற இந்த அரசு துணை நிற்கும் என்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசினார்.

Tags:    

Similar News