தொற்றுநோய் பரவல் குறித்து இணையதளத்தில் தகவல் தெரிவிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் தொற்றுநோய் பரவல் குறித்து இணையதளத்தில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-25 11:24 GMT

எல்லைகளில் அதிகாரிகள் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க இணையதளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு,

வாந்திபேதி, கொப்பளங்கள், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, வெறிநாய்க்கடி, மனிதா்கள், பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள் போன்ற தகவல்களை தாங்களாகவே முன்வந்து இணையதளத்தில் பெயா், கைப்பேசி எண், வயது, வேலை,

கிராமம், மாவட்டம், மாநிலம், நிகழ்வு நடந்த நாள், இடம், தொற்றுநோய் குறித்த விவரங்களைப் பதிவு செய்யலாம். பொது சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, கொள்ளைநோய் பரவலைத் தடுக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அளிப்போரின் விவரங்கள் பாதுகாக்கப்படும்.

இந்த வசதியைப் பயன்படுத்தி, கொள்ளைநோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

Tags:    

Similar News