பேருந்து நிறுத்தம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் காயம்

விருதுநகர் சிவகாசி சாலையில் ஆமத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் அழகசாமி என்பவர் காயம்.;

Update: 2024-03-02 15:39 GMT
ஆமத்தூர் காவல் நிலையம் 
விருதுநகர் ஆமத்தூர் வெங்கடேசபுரம் காலனியை சேர்ந்தவர் அழகர்சாமி வயது 55 . இவர் தினமும் சைக்கிளில் சென்று அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த 27ஆம் தேதி காலை வழக்கம் போல் ஆமத்தூர் அருகே உள்ள டீக்கடையில் சென்று டீ குடித்துவிட்டு சைக்கிளில் விருதுநகர் சிவகாசி சாலையில் ஆமத்தூர் சென்று விட்டு வந்து கொண்டிருந்த பொழுது தனியார் பேருந்து ஒன்றை சாத்தூரைச் சார்ந்த உதயம் என்பவர் இயக்கி வந்ததாகவும் அந்த பேருந்து லக்கேஜ் ஏற்றும் கதவு சரியாக மூடப்படாததால் அந்த கதவு சைக்கிளில் சென்ற அழகர்சாமி மீது இடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் அழகர்சாமி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. இதனால் காயமடைந்த அழகர்சாமி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் அம்பத்தூர் காவல் நிலைப்பள்ளி சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News