கடலூர் அருகே மாணவியர் விடுதி கட்டுமான பணியை ஆய்வு ,

கடலூர் அருகே கல்லூரி மாணவியர் விடுதி கட்டுமான பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தார்.;

Update: 2024-01-06 14:29 GMT
கடலூர் அருகே மாணவியர் விடுதி கட்டுமான பணியை ஆய்வு ,

கட்டுமான பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ

  • whatsapp icon

கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம் ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் சட்டமன்றக்குழு உறுப்பினர்கள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்,

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News